Find Us Online At
iBookstore
Android app on Google Play
Like Us
A programme by
கருந்துளைக்கே சவால் விடும் சூப்பர் விண்மீன்
19 August 2015

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பீற்றுவிசையை (jets) உருவாக்குவதில் போட்டியில்லா சாம்பியனாக இருப்பது கருந்துளைகள். கருந்துளைகள் உருவாக்கும் பீற்றுவிசையை மற்றைய வான் பொருட்கள் உருவாக்கும் பலவீனமான பீற்றுவிசையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் பீற்றுவிசைகள் கருந்துளையினது போலலாமல் பூமியில் இருந்து பார்க்கும் அளவிற்கு பிரகாசமாக இருந்ததில்லை. ஆனால் தற்போது புதிதாய் விண்ணியலாளர்களால் கண்டறியப்பட்ட விண்மீன், கருந்துளையின் சாம்பியன் பட்டத்திற்கு சவால் விடுகிறது.

இந்தச் சவாலை விடுவது ஒரு சூப்பர் விண்மீன் ஆகும். இது மிகவும் அடர்த்தியாக சுருங்கியிருக்கும் நியுட்ரோன் விண்மீன். இந்த விண்மீன், இரட்டை விண்மீன் தொகுதியில் (இரண்டு விண்மீன்கள் ஒன்றையொன்று சுற்றிவருவது) அமைந்துள்ளது. அண்மையில் இந்த நியுட்ரோன் விண்மீன் விண்வெளியில் மிக மிக அதிகளவான பருப்பொருளை (materials) பீச்சி எறிவதை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.

நியுட்ரோன் விண்மீன் தனக்கு அருகில் இன்னுமொரு விண்மீனைக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றில் இருந்து வாயுக்களை தன்பால் உருஞ்சிக்கொள்ளும். இப்படியான நிகழ்வு நடைபெறும்போது உருஞ்சிய வாயுவில் ஒருபகுதி விண்வெளியில் பெருவெடிப்பாக சிதறடிக்கப்படும். அதுவொரு அழகிய, பிரமிக்கத்தக்க காட்சியாக இருக்கும்!

அருகில் இருக்கும் விண்மீனில் இருந்து எவ்வளவு அதிகமாக வாயுவைத் திருடுகிறதோ, அந்தளவுக்கு நியுட்ரோன் விண்மீனைச் சுற்றி உருவாகும் பீற்றுவிசை பிரகாசமாக இருக்கும். ஆனால் இந்த குறித்த விண்மீனை ஆய்வாளர்கள் நோக்கும்போது அது தனக்கருகில் இருக்கும் விண்மீனில் இருந்து சிறியளவு வாயுவைத்தான் உருஞ்சிக்கொண்டு இருந்தது. பொதுவாக பாரிய பெருவெடிப்புடன்கூடிய பிரகாசமான பீற்றுவிசையை உருவாக்க இது போதாது.

ஆகவே இப்படியான பீற்றுவிசையின் உள்ளே இருக்கும் நியுட்ரோன் விண்மீன்கள் விசித்திரமானவை. இவை பலவருடங்களுக்கு அமைதியாக இருந்துகொண்டு, அருகில் இருக்கும் விண்மீனில் இருந்து வாயுவை உருஞ்சிக்கொண்டிருக்கும். திடீரென ஒருநாள் பெரிதாக வெடித்து பீற்றுவிசையை வெளியிடும். இப்படியான பாரிய பீற்றுவிசைகளின் வாழ்வு சிறியதாயினும், அவை வெளிப்படும் விதம் பிரமிக்கத்தக்கது என்பதில் ஐயம் இல்லை.

ஆர்வக்குறிப்பு

கருந்துளைகளின் பீற்றுவிசை, சூரியனின் சக்தியைப் போல பல ட்ரில்லியன் மடங்கு சக்தியை உருவாக்கிவெளியிடும்! ட்ரில்லியன் என்பதை நீங்கள் உணர –ஒரு ட்ரில்லியன் இப்படி இருக்கும்: 1,000,000,000,000

M Sri Saravana, UNAWE Sri Lanka

Share:

More news
12 October 2020
1 October 2020
16 September 2020
14 September 2020
10 September 2020

Images

Super Star Takes on Black Holes in Jet Contest
Super Star Takes on Black Holes in Jet Contest

Printer-friendly

PDF File
950.5 KB