இந்தப் பிரபஞ்சத்தில் நாம் அடிக்கடிக் கேட்கும் கேள்வி, “வேற்றுலக உயிரினங்கள் இருக்கிறதா?” என்பதுதான். அதற்கான பதில்: எமக்குத் தெரியாது என்பதே. எப்படியிருப்பினும் கடந்த 25 ஆண்டுகளில் அண்ணளவாக 2000 வேறு விண்மீன்களை சுற்றிக்கொண்டிருக்கும் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, நாம் கேட்ட கேள்விக்கு மிக அருகில் எம்மைக் கொண்டுவந்துள்ளது எனலாம்.
இந்தத் தொலைவில் உள்ள கோள்கள் புறச்சூரியக்கோள்கள் (exo-planets) என அழைக்கப்படுகிறது. இவை மிகவும் தொலைவில் இருப்பதால், இங்கிருந்து பார்க்கும் போது மிகச் சிறிதாகவும், புகைப்படத்திற்கு கருப்பாகவும் தெரிகின்றன. இருந்தும், சாமர்த்தியமான நுட்பங்களைப் பயன்படுத்தி விண்ணியலாளர்கள் இந்தக் கோள்கள் பற்றி பல்வேறு தகவகல்களைச் சேகரித்துள்ளனர்.
இப்படிச் சேகரிக்கப்பட்ட தகவலில் முக்கியமான ஒரு தகவல், இந்தக் கோள்களின் வளிமண்டல ஆக்கக்கூறு ஆகும். வளிமண்டலம் என்பது, கோளைச் சுற்றிக் காணப்படும் வாயுவாலான ஒரு படலம். பூமியின் வளிமண்டலம் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் வாயுவைக் கொண்டுள்ளது. இந்த ஆக்ஸிஜன் வாயு தாவரங்களால், ஒளித்தொகுப்பு என்னும் செயன்முறையால் உருவக்ககப்ப்பது. தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பனீர்ஆக்ஸைடு வாயு, நீர் மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனை உருவாக்குகின்றனது.
இப்படியாக உயிருள்ள தாவரங்களே வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனின் பெரும்பகுதிக்குக் காரணம் என்பதால், வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் இருப்பது உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறியாகும். ஆனால் தற்போது ஜப்பானிய விஞ்ஞானிகள், வளிமண்டலத்தில் அதிகளவு ஆக்ஸிஜன் உயிர்களின் உதவியின்றியே உருவாகலாம் எனக் கூறுகின்றனர்.
டைட்டானியம் ஆக்ஸைடு என்னும் இரசாயனத்தில் இருந்து அதிகளவாக ஆக்ஸிஜன் உருவாக்கலாம் என்று அவர்கள் நிருபித்துள்ளனர். மேலும் இந்த இரசாயனம் பூமி போன்ற பாறைகளாலான கோள்கள், விண்கற்கள் மற்றும் நமது சந்திரன் ஆகியவற்றின் மேற்பரப்பில் காணப்படுகின்றது.
ஆகவே, புறச்சூரியக்கோள்களில் ஆக்ஸிஜன் இருப்பதைக் கண்டறிந்தால் அங்கு உயிரினம் இருக்கலாம் என சந்தேகிக்கும் அதேவேளை, மேலும் வேறு வழிகளையும் பயன்படுத்தி அங்கு உயிரினம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆர்வக்குறிப்பு
சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் வளிமண்டலத்திற்கு மேலே பூமியைச் சுற்றி வருகிறது. அங்கு இருக்கும் விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்காக, வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்கள் அங்கு பம்ப் செய்யப்படுகின்றன.
Share: